Thursday, 2 September 2010

மீண்டும்................

உன்னை காண போகிறேன் என்ற நொடியில்
மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்......
உன்னை கண்ட நொடியில்........வானவில்லாய்
என் மன வண்ணங்கள்..........
உனது முதல் ஸ்பரிசம் தீண்டலில்
எண்ணத்தில் அடங்கா கனவுகள்......
உன்னை பிரிகையில் எத்தனை நாட்கள்
என்ற எண்ணிகையாய் கண்ணீர்த்துளிகள்......
உன்னை மறுமுறை காண
துடித்திடும் இதயம்......
தேடுதலில்..........விழிகள்....
உன் காத்திருப்பின் பதிலாய்வருவேன் மீண்டும்
நீ எண்ணிடும் நொடியில்....உன் மனதில்.......



                                                                                     ~ காற்றின் சிறகுகள்