Saturday, 31 December 2016

விடைதருவேன்...2016

என்னுள்  நூறு கனவுகள் தந்தாய்....
என் கண்களுக்கு ஆறாய் கண்ணீர் தந்தாய்....
என் இதயத்தில் ஆராதகாயங்கள் தந்தாய்....
அங்குமிங்குமாய் சில புன்னகை தந்தாய்...
எங்கும் எதிலுமாய் வேதனைகள் தந்தாய்....
இருப்பினும்.... உன்னை நேசிக்கிறேன்.....
நிறைவாய் விடைதருகின்றேன்.....



                                                                                 ~காற்றின் சிறகுகள்

தமிழ் காதல்

கடந்த நாட்களில் காதல் இல்லை....
அன்பு இல்லை....ஆதரவு இல்லை.....
இனி வரும் நாட்களில் அவை தேவையும் இல்லை....
தனிமையும் பழகினேன்.....தமிழோடு....


                                                                                   ~ காற்றின் சிறகுகள்



Sunday, 22 May 2016

காதல்...கவிதை....

 அழகிய பொழுதும்...
அன்பான துணையும்...
காதலும் கவிதையும் போல்...
எனக்கும் வாழ்ந்திட ஆசை...
காதலோடு ககவிதையுடன்....


                                                                 




                                                                                   ~ காற்றின் சிறகுகள்
                                                          

Wednesday, 27 April 2016

அழைப்பாய????

என் தொலைபேசியை  தொல்லை  செய்கிறேன்
 உன்  ஒரு  அழைபிற்காக ...
இந்த  முகநூளில்  என்  முகம்வாட  காத்திருக்கிறேன்
 உன்  ஒரு  குறுஞ்செய்திக்காக...
 அழைப்பாய .,இல்லை  தனிமை  என்னை  கொல்லவிடுவாய??



                                                                                                   ~ காற்றின் சிறகுகள்



Wednesday, 9 March 2016

வரம்



உறவுகள் இல்லா  வாழ்வும்...
உணர்வுகள் இல்லா உடலும் ....
கனவுகள் இல்லா  இரவும்....
ஆசைகள் இல்லா மனமும்....
இவை மட்டுமே...உண்மையான வரம்  ....



                                                                                 ~ காற்றின் சிறகுகள் 





                                                                         

Saturday, 27 February 2016

காந்தம்




பெண்களின் கண்களில் உள்ளது காந்தம்....
அவற்றிற்கு- தேவையானவர்களை ஈர்க்கவும் தெரியும்...
தேவையற்றவர்களை நீக்கவும் தெரியும்...



                                                                            ~காற்றின் சிறகுகள்

என் அழகியின் சிரிப்பு




சின்ன சிரிப்பில் உள்ளம் கொள்ளை செய்யும் என் அழகே....
ஒரு உண்மையை உணர்ந்துகொள்.... உன் சிரிப்பில் மட்டும்
 நான் உன்னை ரசிப்பதில்... உன் அழுகையிலும் தான்....
உன் கண்ணீர் என் உள்ளம் என்னும் ரோஜாவை
 உயிர் கொள்ள செய்யும்  பன்னீர்....





                                                                        ~ காற்றின் சிறகுகள் 

உனக்காய் வாழ்வில் ஒரு அத்தியாயம்.....



கண்டேன்....முதல் காதல் கொண்டேன்....
விண்ணிலும் காண மாற்றங்கள் என்னுள் கண்டேன்....
மண்ணுக்குள் வாசம் போல் உன் சுவாசம் கொண்டேன்...
பல்லவியும் சரணங்களும் உன் குரலில் உணர்ந்தேன்...
பலநூறு எண்ணங்கள் என் மனதில் சேர்த்தேன்...
உன் விழியில் என் உலகம் நான் காண்பேன் என்றேன்....
என் இரு விழியும் குருடாகி  இருள்  வீதியில் நின்றேன்....
காதல்---- பிறப்பதில் இல்லை இறப்பதில் இன்பம் தரும்....



                                                                                         ~ காற்றின் சிறகுகள்