Monday, 3 January 2011

என் இனிய அண்ணனுக்கு....

என் இனிய அண்ணனுக்கு....
உடன் பிறவா பொழுதிலும்...
உண்மையாய் பாசம் தந்தாய்...
உன் உதிரம் தனை போல கண்ணிமையாய் கொண்டாய்...
அன்பிற்கு ஏக்கமின்றி..அலைபோல் அள்ளி தந்தாய்...
குறும்புகள் அதிகம் செய்தும்...அழகாய் அதை ரசித்தாய்...
கோபம் கொண்டு கத்தும் போதும் அமைதியாய் புன்னகைத்தாய்...
ஏமாற்றம் கண்டபோது அன்னையாய் அரவணைத்தாய்...
இத்தனையும் செய்த உனக்காய்....பலன் என்ன நான் செய்ய??
அடுத்த பிறவி கொண்டு உன் தங்கையாய் உடன் பிறப்பேன்...
பிறவி கடன் தீர்ப்பேன்.....


                                                                          ~ காற்றின் சிறகுகள்



நாணம்....

என்னை உன் வீட்டின் முற்றத்தில் காக்க வைத்து...
நெடுநேரம் பின் வீடு வந்து...
சென்ற வேலை நடவாது...
ஏமாற்றம் கொண்டு... நேரத்தின் குறைபாடாய்
ஓடி சென்று குளியல் செய்து....
ஈரமுடன் நீ வர....உனக்காய்
காத்திருந்த என் மனம் உன்னை கண்டதும்
ஓடிவந்து உன் தலை துவட்ட ஏங்கிடும்..
அழகாய் உன் புன்னைகை கண்டு....
அணைத்து முத்தமிட நான் குரல் எழுப்பும் முன்..
ஓடி நீ அறை புகிந்திட...என்மனமும் நாணதிடம் புகிந்திடும்...



                                                                            ~ காற்றின் சிறகுகள்


உன் ஒற்றை முத்தம்...........

மனதில் இதுவரை காணாத பயம்...
பனி இரவிலும் இல்லாத நடுக்கம்...
தீராத காய்ச்சலிலும் இல்லாத வெட்பம்...
பரிட்சையிலும் இல்லாத குழப்பம்....
காதலிலும் இல்லாத தவிப்பு.....
இவை எல்லாம் தந்தது.....உன் அழகிய ஒற்றை முத்தம்........




                                                                   ~ காற்றின் சிறகுகள்

வார்த்தைகள்.....

உன் வீட்டில் தனியாய் நாம் இருந்தபோது....
காவலுக்காய் உன் பாச வளர்புகளை விட்டு...
நாம் பார்வையில் புரிந்த காதலை சொல்ல...
விளக்க...ஜென்மம் ஒன்றல்ல....ஓராயிரம் இருபினும்...
போதாது வார்த்தைகள்!!!!!!!!!!!!!



                                                                            ~ காற்றின் சிறகுகள்

எதிர்பார்ப்பு..........

மௌனமாய் கழிந்த நிமிடங்களில்
என் மனமெங்கும் நிறைந்தது எதிர்பார்ப்பு.....
நீ எப்போது உன் காதலை சொல்வாய் என????
நிறைவேற்ற நாள் தேடும் நீ...... நம்பிக்கையில் நான்!!!!!!!!!!!!!!



                                                                   ~ காற்றின் சிறகுகள்