Thursday, 31 May 2012

நிலா கவிதைகள்.!


1
முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!


2
விரல்கள் நீட்டி 
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!


3
குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய் 
அத்தனையிலும்  நீ.
கைகளால் முகம் மறைத்து சிணுங்கித் திரும்பினாய்.
அழகு நிலா.!






நீ தான் அது நினைவிருக்கிறது.!
ஒரு நீண்ட மணற்பரப்பில் நீ ஓடினாய்
உன் தடங்களை பின்பற்றி தொடர்கிறேன் நான்..
கைகெட்டும் தூரம் வந்ததும்
காணாமல் போகிறீர்கள் நீயும் மணலும்.
பின் வாசங்களின் மத்தியில் உன்னை துரத்திக் கொண்டிருக்கிறேன்.
பூக்களை வருடிக் கொண்டே ஓடும் உன் விரல்களை 
மொய்க்கிறன தேனீக்கள்.!
உன்னை மொத்தமாய் அருந்துவதற்க்குள்
மகரந்தம் உதிர்த்து நீல் கடல் குதிக்கிறாய் நீ.
மீன் அல்லாததை மறந்து நானும் குதிக்கிறேன்.!
அங்கே நீந்துதல் தேவை படவில்லை - ஆழ் கடலின் கீழே 
ஒரு பாலையில் வெப்பம் மறந்து ஓடிக்கொண்டிருந்தாய் நீ..
சிரத்தைகளுக்கு பின் உன்னை கைப்பற்றினேன் .!
நொடியில் இலைகளும் மரங்களுமாய் அடரத் தொடங்கியது பாலை

ஒவ்வொன்றாய் விலகும் விரல்களினூடே
உள்ளிருந்து பட்டாம்பூசிகள் சடசடத்துப் பறக்கத் தொடங்கின..
...
..
ரீங்காரங்களின் சத்தத்தில் கலைந்தேழுகிறேன் நான்..
மணற்பரப்பை உள்ள்ளிழுத்தது நீல் கடல்.!
பாலை பூக்கள் அடர்ந்தும் 
வனம் பட்டாம்பூசிகளோடும் மறைந்தன - என் கனவும்.! 
வண்ணம் நிறைந்த உன் முகம் மட்டும் நினைவிருக்கிறது - நீ தான் அது.!

-பிரபாகரன்.!

பாவையும்- கள்வனும் (பாகம் 1 )



அதிகாலையாம்... சூரியனுக்கு நேரம் கிட்டிய வேகத்தில் துயில் துறந்தாள்   பாவை.. சிற்பமே உயிர் பெற்றது போன்ற பிரம்மையில் கள்வன் ( பாவையின் ஆசை கணவன்..அவள் வாழ்வின் கள்ளன்.)கண் திறந்து நோக்கினான் பாவையை...

                                  இரவின் பேரயைற்சியிலும் ,அன்பின் ஆற்று வெள்ளத்திலும் சிறுமை குன்றாது பாவையின் பவளம் பூசிய நிலா முகம்..அன்றைய அலுவல்களை சிந்தித்த வண்ணம் புதிதாய் மலர்ந்த பூவின் சிரிப்புடன் நாளை தொடங்கினர்....

                                          தன்னில் பாதியாம்  சிவன் என சக்தியும்.. என்னில் ஜீவனாம் சக்தி என சிவனும் ஆமோதித்த  வர்ணம் அமைந்தன  நம் பாவையும் கள்வனும்.... பாவையின் மனம் என்றுமே பேராந்தமாய்  நிறைய கள்வன் என்றும் மறந்ததில்லை...மறுப்பதில்லை....
                       
                                                சிறிய உதவியேனும் புதைந்தே நிகழ்தன நாளின் அத்துணை அலுவல்களும்... இதன் சாரமாக எங்கு நோக்கினும் இருவரின் கலப்பும் பொருந்தியதாய் அமைந்தே  இருந்தது சுற்றம்.....இருவரின் அயர்ச்சியும் நீங்க நீராடிய உற்சாகத்துடன் இறை பற்றாட முனைந்தனர்... அன்பே, அறிவே இறையாய் நிறைந்த இருவர் வாழ்வின் நன்மை தியானித்தனர். இத்துணை இனிய புரிதலும் கொண்டே அமைந்த உறவை மேலும்  உயிராகவே இறை அருள் நிறைவை போற்றினர்............
                                               பின்பே நினைவாய் காலை உணவை குழந்தையின் பசி கண்ட தாயாய் முனைந்த பாவையை பிரிய மனமின்றி அடுமனை சேர்த்து...தோட்டம் சேர்ந்தான் கள்வன்....நாளின் மலர்ச்சியில் மணம் சேர்க்க பாவையின் பவளமல்லி தோட்டத்தில் பாதையை சேர்ந்திருக்க ஆனந்தம்  கொண்ட கள்வனோ...கண்ணனாய் மாறி மெல்ல பாவை இடம் புகுந்தான்....
                                                 மழலை கன்னம்பூசியாய் பாவையிடம் அடம் கொண்டு கண் மறைத்து மெல்ல..மெல்ல பாவையின் பூம்பாதம் நோகாதே தோட்டம் சேர்க்க,பாவை கண் திறம்பட ஆனந்த துள்ளலில் பட்டாம்பூச்சியாய் படபடத்தாள்......
                                                   உள்ளத்தின் உற்சாகத்தில் நிலை மறந்து சிலை பெற்ற  பாவையை அழைக்க மனமின்றி  அடுமனை  பணி ஏற்க நிதானித்த கள்வன்..மெல்ல விலக..... சிறுபிள்ளையின் தின்பண்டம் பிரித்த அதிர்ச்சியாய் உடன் உயிர் பெற்றால் பாவை.....
                                                  கள்வன்-பாவை சிறு ஊடல் கொள்ள தான் கண் வைத்தோமா என்பது போல் தானே நலமாய் அடங்கியது உணவு.....ஊடல் நீங்காதே  கழிந்தது அலுவல்கள்.....ஊடல் உடைக்க எண்ணிய பாவை கள்வனை தேட...கள்வனோ...பாவை பசியறியாது இருக்கவே உணவோடு அவளை சேர்ந்தான்......
                                இருவரும் வயிற்று பசியோடு மனதின் பசியும் ஆற்றினர்.....மாலை பொழுதின் மயக்கம் கொண்டு இருவரும் தோட்டத்தில்  மனம் மலர ...இருவரின் அன்பில் மயங்கிய சூரியனோ தலை மறைந்து.. சந்திரனை அழைத்தான்......
                                       இரவின் காந்தமாய்,மரகத மலராய் என்றும் நிறைந்த நம் பாவையும்-கள்வனும் மௌனத்திலேயே காதல் புரிந்தனர். கண்ணின் காந்தத்தில் கட்டுண்டனர்......குளிர்ச்சியின் தாக்கத்தில் பாவை சிணுங்க,இதமாய் தன்னில் சேர்த்தான் கள்வன்...
                                       இரு மனம் ஒன்றாய் சங்கமித்த வெள்ளம் பரவ...நாளின் முடிவாம்..எனினும் நம் காதல் குயில்களின் என்றும் தொடரும் பொழுதுகள் மலர்தன............இவர்களின் அன்பில் மேலும் அழகு கூட்ட நட்சத்திரங்களும் மழையாய் வானில் தூறின..................

                                                        மீண்டும் காதல் தொடரும்..................




                                                                                ~காற்றின் சிறகுகள்...........

காதல் பால்...

என் பயணம் முடிவதற்குள்..
உன்னை பார்த்து விட்ட மகிழ்ச்சி போதும்..
கடந்த நாட்களின் வலி பற்றியோ..
இனி எஞ்சிய பயண தூரம் பற்றியோ..
வருந்தப் போவதில்லை நான்..!!

                                                                              - பிரபாகரன்.!
 

வேரில்லாச் செடி..


இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்
தேனீர் கோப்பைகளுடன் 
உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது
என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.
மௌனம்  மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்
உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.
மௌனம் செடியின் நீரானது.!
விழி திறந்திருக்கும்.
நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.
இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.
பார்வைகள் ஆனது  செடிதாங்கும் தண்டாய்.!
பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்
நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.
நானும் வண்ணமாய் நிறைகையில் உறக்கம் கலைகிறது.
கனவுகளால் கிளை பரப்பியது செடி.!
நான் தொடங்கினேன் நீ தொடர்ந்தாய்
வார்த்தைகள் தீரா வெளியில் நடமாடினோம்.
பின், நான் நீயாய் - நீ நானாய் முடிந்தோம்.
செடியின் இலைகளாய் நம் காதல் இருக்கிறது.!
உன்னை கவிதை செய்து தருகையில்
கால்கள் நிலம்  தறிக்காது பறக்கிறேன்.. என்றாய் நீ.
இரண்டு நிலாக்கள் எதற்கு.?  இங்கேயே இரு.. என்றேன் நான்.
வெட்க  நிறத்தில் பூ பூத்தாய் இதழ்களால்.!
பூக்களாய் ஆனாய் செடியில் நீ..!
வேரில்லாச் செடி விருட்சமாய் வளர்ந்து நிறைத்தது
என்னில் உன்னை .!

                                                                                                   - பிரபாகரன்.!