Thursday, 31 May 2012

பாவையும்- கள்வனும் (பாகம் 1 )



அதிகாலையாம்... சூரியனுக்கு நேரம் கிட்டிய வேகத்தில் துயில் துறந்தாள்   பாவை.. சிற்பமே உயிர் பெற்றது போன்ற பிரம்மையில் கள்வன் ( பாவையின் ஆசை கணவன்..அவள் வாழ்வின் கள்ளன்.)கண் திறந்து நோக்கினான் பாவையை...

                                  இரவின் பேரயைற்சியிலும் ,அன்பின் ஆற்று வெள்ளத்திலும் சிறுமை குன்றாது பாவையின் பவளம் பூசிய நிலா முகம்..அன்றைய அலுவல்களை சிந்தித்த வண்ணம் புதிதாய் மலர்ந்த பூவின் சிரிப்புடன் நாளை தொடங்கினர்....

                                          தன்னில் பாதியாம்  சிவன் என சக்தியும்.. என்னில் ஜீவனாம் சக்தி என சிவனும் ஆமோதித்த  வர்ணம் அமைந்தன  நம் பாவையும் கள்வனும்.... பாவையின் மனம் என்றுமே பேராந்தமாய்  நிறைய கள்வன் என்றும் மறந்ததில்லை...மறுப்பதில்லை....
                       
                                                சிறிய உதவியேனும் புதைந்தே நிகழ்தன நாளின் அத்துணை அலுவல்களும்... இதன் சாரமாக எங்கு நோக்கினும் இருவரின் கலப்பும் பொருந்தியதாய் அமைந்தே  இருந்தது சுற்றம்.....இருவரின் அயர்ச்சியும் நீங்க நீராடிய உற்சாகத்துடன் இறை பற்றாட முனைந்தனர்... அன்பே, அறிவே இறையாய் நிறைந்த இருவர் வாழ்வின் நன்மை தியானித்தனர். இத்துணை இனிய புரிதலும் கொண்டே அமைந்த உறவை மேலும்  உயிராகவே இறை அருள் நிறைவை போற்றினர்............
                                               பின்பே நினைவாய் காலை உணவை குழந்தையின் பசி கண்ட தாயாய் முனைந்த பாவையை பிரிய மனமின்றி அடுமனை சேர்த்து...தோட்டம் சேர்ந்தான் கள்வன்....நாளின் மலர்ச்சியில் மணம் சேர்க்க பாவையின் பவளமல்லி தோட்டத்தில் பாதையை சேர்ந்திருக்க ஆனந்தம்  கொண்ட கள்வனோ...கண்ணனாய் மாறி மெல்ல பாவை இடம் புகுந்தான்....
                                                 மழலை கன்னம்பூசியாய் பாவையிடம் அடம் கொண்டு கண் மறைத்து மெல்ல..மெல்ல பாவையின் பூம்பாதம் நோகாதே தோட்டம் சேர்க்க,பாவை கண் திறம்பட ஆனந்த துள்ளலில் பட்டாம்பூச்சியாய் படபடத்தாள்......
                                                   உள்ளத்தின் உற்சாகத்தில் நிலை மறந்து சிலை பெற்ற  பாவையை அழைக்க மனமின்றி  அடுமனை  பணி ஏற்க நிதானித்த கள்வன்..மெல்ல விலக..... சிறுபிள்ளையின் தின்பண்டம் பிரித்த அதிர்ச்சியாய் உடன் உயிர் பெற்றால் பாவை.....
                                                  கள்வன்-பாவை சிறு ஊடல் கொள்ள தான் கண் வைத்தோமா என்பது போல் தானே நலமாய் அடங்கியது உணவு.....ஊடல் நீங்காதே  கழிந்தது அலுவல்கள்.....ஊடல் உடைக்க எண்ணிய பாவை கள்வனை தேட...கள்வனோ...பாவை பசியறியாது இருக்கவே உணவோடு அவளை சேர்ந்தான்......
                                இருவரும் வயிற்று பசியோடு மனதின் பசியும் ஆற்றினர்.....மாலை பொழுதின் மயக்கம் கொண்டு இருவரும் தோட்டத்தில்  மனம் மலர ...இருவரின் அன்பில் மயங்கிய சூரியனோ தலை மறைந்து.. சந்திரனை அழைத்தான்......
                                       இரவின் காந்தமாய்,மரகத மலராய் என்றும் நிறைந்த நம் பாவையும்-கள்வனும் மௌனத்திலேயே காதல் புரிந்தனர். கண்ணின் காந்தத்தில் கட்டுண்டனர்......குளிர்ச்சியின் தாக்கத்தில் பாவை சிணுங்க,இதமாய் தன்னில் சேர்த்தான் கள்வன்...
                                       இரு மனம் ஒன்றாய் சங்கமித்த வெள்ளம் பரவ...நாளின் முடிவாம்..எனினும் நம் காதல் குயில்களின் என்றும் தொடரும் பொழுதுகள் மலர்தன............இவர்களின் அன்பில் மேலும் அழகு கூட்ட நட்சத்திரங்களும் மழையாய் வானில் தூறின..................

                                                        மீண்டும் காதல் தொடரும்..................




                                                                                ~காற்றின் சிறகுகள்...........

No comments:

Post a Comment