Thursday, 31 May 2012

நிலா கவிதைகள்.!


1
முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!


2
விரல்கள் நீட்டி 
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!


3
குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய் 
அத்தனையிலும்  நீ.
கைகளால் முகம் மறைத்து சிணுங்கித் திரும்பினாய்.
அழகு நிலா.!






நீ தான் அது நினைவிருக்கிறது.!
ஒரு நீண்ட மணற்பரப்பில் நீ ஓடினாய்
உன் தடங்களை பின்பற்றி தொடர்கிறேன் நான்..
கைகெட்டும் தூரம் வந்ததும்
காணாமல் போகிறீர்கள் நீயும் மணலும்.
பின் வாசங்களின் மத்தியில் உன்னை துரத்திக் கொண்டிருக்கிறேன்.
பூக்களை வருடிக் கொண்டே ஓடும் உன் விரல்களை 
மொய்க்கிறன தேனீக்கள்.!
உன்னை மொத்தமாய் அருந்துவதற்க்குள்
மகரந்தம் உதிர்த்து நீல் கடல் குதிக்கிறாய் நீ.
மீன் அல்லாததை மறந்து நானும் குதிக்கிறேன்.!
அங்கே நீந்துதல் தேவை படவில்லை - ஆழ் கடலின் கீழே 
ஒரு பாலையில் வெப்பம் மறந்து ஓடிக்கொண்டிருந்தாய் நீ..
சிரத்தைகளுக்கு பின் உன்னை கைப்பற்றினேன் .!
நொடியில் இலைகளும் மரங்களுமாய் அடரத் தொடங்கியது பாலை

ஒவ்வொன்றாய் விலகும் விரல்களினூடே
உள்ளிருந்து பட்டாம்பூசிகள் சடசடத்துப் பறக்கத் தொடங்கின..
...
..
ரீங்காரங்களின் சத்தத்தில் கலைந்தேழுகிறேன் நான்..
மணற்பரப்பை உள்ள்ளிழுத்தது நீல் கடல்.!
பாலை பூக்கள் அடர்ந்தும் 
வனம் பட்டாம்பூசிகளோடும் மறைந்தன - என் கனவும்.! 
வண்ணம் நிறைந்த உன் முகம் மட்டும் நினைவிருக்கிறது - நீ தான் அது.!

-பிரபாகரன்.!

No comments:

Post a Comment