Tuesday, 1 March 2011

அணை...திறக்கும்....

காலை மாலை என்று உன்னை தேடி பார்த்த கண்கள் -
இன்றும் தேடுகின்றது பழைய புகைப்படங்களில்.....

வேண்டியதை கேட்டு ருசித்த நாக்கு-
இன்றும் ஏங்குகிறது உன் சமையல் ருசிக்கு.....

உன்னிடம் மட்டுமே சண்டையிட்ட மனம்-
இன்றும் சண்டையிடுகிறது அதனுடன்.....

உன்னிடம் மட்டுமே உணர்ந்த வெட்பத்தை-
இன்றும் உணர தவிக்கிறது என் உயிர்.....

நீ அழகாய் அழைத்திடும் செல்ல பெயரை கேட்ட காதுகள்-
இன்றும் துடிக்கிறது உன் குரலை கேட்க......

உன்னுடைய வாசத்தை உணர்த்த நாசி-
இன்றும் காற்றில் சுவாசிக்க தேடுகிறது.....

உன் மடியினில் குழந்தையாய், சீண்டிடும் மழலையாய்
என்றும் மாறிட ஏங்குகிறது என் ஆன்மா.....

இவற்றை எல்லாம் பேசிட பொங்கிடும் வார்த்தைகளை...அடகுகிறேன்
அணைகட்டி....ஒருநாள் உன் அருகில் வருவேன்....அன்று திறக்கும் என்
வார்த்தை அணை.......



                                                              ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment