என்றும் உன் நினைவில் நான் இருப்பதால்தான்....
இந்த உலகமும் எனக்கு புதிதாய் தோன்றுகிறது.
உன் சுவாசமும் கலந்திருக்கும் காற்றானதால் தான்...
எனது சுவாசமும் சீராக இயங்குகின்றது.
எனக்காய் நீ ஒருவன் இருப்பதால் தான்....
இன்னும் என் உயிர் வாழ்கின்றது.
கைபிடிக்கும் தொலைவில் நீ இருபினும்....
கண் இமைக்கும் நொடியில் மறைகிறாய்....என்னுள்...
மேகமாய்....முகிலாய் நீ இருந்தால்
உன்னை ஏந்திகொள்ளும் வானமாய் நான் வருவேன்....
மனதில் என்றும் உன்னை என் உயிராய் சுமப்பேன்....