Monday, 28 February 2011

காதல் பெண்ணின்....சுதந்திரம்....

போராடி பெற்றது நம் நாட்டின் சுதந்திரம் மட்டும் அல்ல....
உன்னிடத்தில் இருந்து நான் பெற்ற என் சுதந்திரமும்.......
போரட்டத்தின் வெற்றியில் சுதந்திரம் கிடைப்பினும்....
என்னை வீழ்துகிறாய் உன் சந்தேகம் என்னும் ஆயுதத்தால்.....
இனி சுதந்திரம் இருபதின் பலன் என்ன????
தருகிறேன் திரும்ப பெற்றுகொள் நீ அளித்த சுதந்திரத்தை.....



                                                                   

                                                                         ~ காற்றின் சிறகுகள்

Wednesday, 23 February 2011

ஏன்???

என்னுள் மாற்றம் நிகழ்வதை அறியும் என்னால்....
ஏற்கவோ....தடுக்கவோ முடிவதில்லை......
தானாய் சிரிக்கும் என் மனமோ....
ஏனோ உன் முன் அழுவதில்லை.....
உனக்காய் வாழும் எனக்கோ....
இயல்பால் எதற்கோ வாழ்க்கை இல்லை....
குழப்பமே....விடையாகி.....ஆழ் கிணற்றில் நான்.....



                                                                                ~ காற்றின் சிறகுகள்

Wednesday, 16 February 2011

வாழ்க்கை...

இனி நீ இல்லை என்றால் இறப்பேன் என கூறமாட்டேன்....
அதனிலும் கொடுமையான வாழ்வை வாழ்வேன்...
உனக்காய்......உன்னால்......




                                                      ~  காற்றின் சிறகுகள்

நம்பிக்கையில்.....

இது வரை என்னுள் எழாத வலியினை
ஏற்கிறேன் இன்று.....உன்னால்.....
எதுவரை என்று தெரியாத போதும்....
மருந்தாய் நீயே வருவாய் என்னும் நம்பிக்கையில்.....





                                                                 ~ காற்றின் சிறகுகள்

ரசிப்பு...

உன் ஒற்றை நிமிடம் கூட ரசிக தவறாத எனக்கு...
நீ கேட்ட ஒற்றை வார்த்தைகளைகூட
 ரசிக்க

 முடியவில்லை....
நீ கேட்டது என்னிடம் அல்ல....
என்னில் வாழும் உன்னிடம் என்பதால்....



                                                                            ~ காற்றின் சிறகுகள்


மறந்தேன்-மணந்தேன்...

உனக்காய் பெற்றோரை மறந்தேன்....
உடன் பிறப்பை மறந்தேன்.....
உண்மை நட்பை மறந்தேன்....
உணர்வுகளை மறந்தேன்.....
நீயோ.....இறுதியாய் என்னையே மறந்தாய்....
நானோ....மரணத்தை மணந்தேன்............



                                                                         ~ காற்றின் சிறகுகள்

காதல்....

தொடக்கத்தில்....இனிமை....
தொடங்கியபின்.... பசுமை...
தொடர்வதில்....கடுமை.....
தொடரும் நிலை வெறுமை....

                                           
                                                                           ~ காற்றின் சிறகுகள்


வலி...

கத்தியினால் வெட்டி பார்த்தேன் வலிக்கவில்லை...
இரும்பினால் சுட்டு பார்த்தேன் எரியவில்லை...
கம்பத்திலும் முட்டி பார்த்தேன் முறியவில்லை....
உன் ஒற்றை வார்த்தையில் யாவையும் உணரவைத்தாய்.....




                                                                              ~ காற்றின் சிறகுகள்