Tuesday, 18 June 2013

மின்வெட்டு .....

என்மீது வியர்த்தபொழுதே நான் உணர்ந்தேன் -
ரோஜா இதழ்களின் மீது படர்ந்திருக்கும் பனித்துளியை ...
மின்விசிறியும் எனைக்கண்டு கோபம் கொள்கிறது
உனைப்போல் என்னால் இயங்க இயலவில்லையே என ..
என்செய்வேன் -
தடைகள் உனக்கு மட்டுமல்ல
எனக்கும் உள்ளதே ...
விசைபலகயும் சேர்ந்து கிசுகிசுத்தது -
வீணையைப்போல் எனை மீட்டும் விரலுக்கும்
ஒய்வு தேவையா என்று..
என்செய்வேன் -
வீணைக்கு மட்டுமல்ல
மீட்டும் விரலுக்கும் ஒய்வு அவசியம் என்றேன்...
மொட்டைமாடியில் -
மிதமான மழைச்சாரலில்
நிலவின் அழகை ரசிக்க சென்றேன்...
என்னை பார்த்ததும் தன்னை ஒளித்துக்கொண்ட
நிலவை பார்த்து
உரக்கச்சொல்லிவிட்டு இறங்கினேன்
நீயுமா ?
உனக்குமா ?
உன்னிடமும் உள்ளதா -
மனிதர்கள் மட்டுமே கொண்டிருக்கும்
"தாழ்வுமனப்பான்மை"
உறங்க நினைத்து படுக்கையில் சாய்ந்தபொழுது
இதோ வந்துவிட்டேன் என்றது மின்சாரம்..
படுக்கையிடம் கிசிகிசுத்தது தலையனை -
மலர்களின் ஸ்பரிசத்தை பிடுங்க வந்துவிட்ட
பிசாசு இந்த மின்சாரம் என்று ....
எனைப்பற்றி
நானறிந்துகொள்ளவும் அவசியமாகிறதே
இந்த மின்வெட்டு !


                                                                           ~ பாபு (மனோ)

மனிதர்கள்....

எத்தணை எத்தணை மனிதர்களை
பார்க்கிறேன் இங்கே ...
அன்போடு சில பேர்
அழகாக பல பேர்
பண்போடு சில பேர்
பகுத்தறிவோடு பல பேர்
கவிதையோடு சில பேர்
கவிதையாகவே சில பேர்
வழி காட்ட சில பேர்
வழிகாட்டியாகவே சில பேர்
குறும்பாக சில பேர்
குள்ளநரித்தனத்தோடு சில பேர்
கேள்வியோடு சில பேர்
கேள்விக்குறியாய் பல பேர்
கருத்துக்கூற சில பேர்
கலைத்துப்பார்க்க சில பேர்
பொழுதை கழிக்க சில பேர்
கழித்த பொழுதை அசைபோட சில பேர்
எவனோ ஒருவன் -
எங்கிருந்தோ -
நமக்காக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருகிறான் ...
அவன் சிந்தையின் வெளிப்பாடு -
இதோ இங்கே நாமெல்லாம் ஒன்றாக ...
வியக்கிறேன் -
வியந்து சாய்கிறேன் ..
உறக்கத்திலும் ஊடே வந்து போகும் மனிதர்கள் ..
விட்டுப்போக மனமில்லாமல்
கரைந்தே போகிறேன்
பொழுதெல்லாம்
இங்கே
கரைந்தே போகிறேன் ...
தாமரை இதழ்களின் மீது தண்ணீர் துளிகளைப்போல
ஒட்டிக்கொள்கிறேன் -
இங்கே நானும் ஒன்டிக்கொள்கிறேன்...

                                                                                ~ பாபு (மனோ)

அம்மாவின் அன்பு...

எத்தனை நாட்கள் வலித்திருக்கும் அம்மாவிற்கு
ஏன் தெரியாமல் போனது எனக்கு
என் அலங்காரத்திற்கு உன்னை வருத்தி இருக்கிறேனே
ஏன் தெரியாமல் போனது எனக்கு
மடிப்பு கலையாமல் நான் உடுத்த -
உன்னை படுத்தி இருக்கிறேனே
ஏன் தெரியாமல் போனது எனக்கு
இத்தனையும் தெரியாத எனக்கு
இன்றுதான் புரிந்தது
என் மூளையையும் சலவை செய்தது -
இன்று புதிதாக வாங்கிய "WASHING MACHINE" என்று.....



                                                                ~ பாபு (மனோ)

சொல்லாத காதல் .......

என்னை பார்த்து சொல்லடி பெண்ணே
வயதை மறந்து ஓடி பிடித்தோமே -
அப்போது சொன்னேனா
முறை சொல்லி அழைத்து சென்றாயே -
அபோது சொன்னேனா
பிரிந்து இருந்த நாட்களில் தனிமையில் அழுது தொலைத்தேனே -
அப்போது சொன்னேனா
செல்லமான கோபத்துடன் அறிவுரை சொன்னாயே -
அப்போது சொன்னேனா
உன் வருகைக்காக கடிகார முள்ளை நொந்துகொண்டேனே -
அப்போது சொன்னேனா
ஆடையின் இறுக்கத்தில் உறக்கம் தொலைத்தேனே
அப்போது சொன்னேனா
வயதின் சீற்றத்தால் மனதின் இறுக்கத்தை
உன் பெயர் சொல்ல்லி தளர்த்திக்கொண்டேனே -
அப்போது சொன்னேனா
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து
வருடங்கள் கடந்தும் என் காதலை சொல்லாமல் இருந்தேனே
இதற்க்கெல்லாம் பிரதிபலனாக
நீயும் உன் திருமண தேதியை சொல்லாமல் போயிருக்கலாமே .....
நியாயமா ?


                                                                                         ~ பாபு (மனோ)

வேடிக்கை....

வேடிக்கைதான் பார்கிறேன் நண்பா ..
பல்லை பிடுங்கிய பாம்பிடம் வீரத்தை காடும் பாம்பாட்டியின் வித்தையும்
வேடிக்கைதான்..
பல் முளைக்காத பச்சிளம் குழந்தையின் சிரிப்பும்
வேடிக்கைதான் ..
மீசை முளைக்காத பருவத்தில் காதல் முளைத்த இளைஞனின் குறும்புத்தனமும்
வேடிக்கைதான்..
முதுமையிலும் காதலை மறக்க முடியாதவரின் கவிதை வரிகளும்
வேடிக்கைதான்...
வேடிக்கைதான் பார்கிறேன்



                                                                                ~ பாபு (மனோ)

கண்ணீர் மை...

காதலின் வலி காதலிபவர்கே தெரியும் என்றிருந்தேன்
வலியை மட்டுமே காதலித்து கொண்டிருக்கும் நான் ..
காதல் மட்டுமல்ல
வலி கூட சில நேரங்களில் கவிதை எழுதும் பேனாவிற்கு மையாக தன் கண்ணீரை தாரை வார்க்கின்றது...

                                                                      ~ பாபு (மனோ)

பாராமல்...

உன்னை என் கண்கள்  காணாவிடினும்....
உள்ளத்தில் வரித்தேன்...அழகோவியமாய்...
பேசிய நிமிடத்தின் அண்மையில்...பேசா நொடிகளும்
கடக்கின்றேன்
கருவியாய்.....
உறவாகும் காலங்கள் இன்னும் இருபினும்.....
வாழ்கின்றேன் -- உனது உயிராய் !!!


                                                                        ~காற்றின் சிறகுகள்

பட்டாம்பூச்சி...

நீ காதல் என்று சொல்லவில்லை
நான் காமம் என்று கொள்ளவில்லை
இருப்பினும்  நமது உள்ளத்தில்...
பட்டாம்பூச்சியின் சிறகடிப்பாய்.. படபடப்பின்
மறைவில்---நாம் !!!

                                                                                                                       ~காற்றின் சிறகுகள்