Tuesday, 18 June 2013

மின்வெட்டு .....

என்மீது வியர்த்தபொழுதே நான் உணர்ந்தேன் -
ரோஜா இதழ்களின் மீது படர்ந்திருக்கும் பனித்துளியை ...
மின்விசிறியும் எனைக்கண்டு கோபம் கொள்கிறது
உனைப்போல் என்னால் இயங்க இயலவில்லையே என ..
என்செய்வேன் -
தடைகள் உனக்கு மட்டுமல்ல
எனக்கும் உள்ளதே ...
விசைபலகயும் சேர்ந்து கிசுகிசுத்தது -
வீணையைப்போல் எனை மீட்டும் விரலுக்கும்
ஒய்வு தேவையா என்று..
என்செய்வேன் -
வீணைக்கு மட்டுமல்ல
மீட்டும் விரலுக்கும் ஒய்வு அவசியம் என்றேன்...
மொட்டைமாடியில் -
மிதமான மழைச்சாரலில்
நிலவின் அழகை ரசிக்க சென்றேன்...
என்னை பார்த்ததும் தன்னை ஒளித்துக்கொண்ட
நிலவை பார்த்து
உரக்கச்சொல்லிவிட்டு இறங்கினேன்
நீயுமா ?
உனக்குமா ?
உன்னிடமும் உள்ளதா -
மனிதர்கள் மட்டுமே கொண்டிருக்கும்
"தாழ்வுமனப்பான்மை"
உறங்க நினைத்து படுக்கையில் சாய்ந்தபொழுது
இதோ வந்துவிட்டேன் என்றது மின்சாரம்..
படுக்கையிடம் கிசிகிசுத்தது தலையனை -
மலர்களின் ஸ்பரிசத்தை பிடுங்க வந்துவிட்ட
பிசாசு இந்த மின்சாரம் என்று ....
எனைப்பற்றி
நானறிந்துகொள்ளவும் அவசியமாகிறதே
இந்த மின்வெட்டு !


                                                                           ~ பாபு (மனோ)

No comments:

Post a Comment