Monday, 24 May 2010

நண்பனே..........

பிரியமுள்ள நண்பனுக்கு...
பிரியமாய் தோழி.....
என் சிரிப்பாய் நீ இருந்தாய்........
கண்ணீரை துடைதெரிந்தாய்.......
வலி என்று சொல்லுமுன்னே...
மருந்தொன்றை எடுத்துவந்தாய்....
பசி என்று கூற நேர்ந்தால்....
உணவிற்கு குறை சொல்லாய்......
உயிராய் நான் வாழ......
ஊனாய் நீ ஆனாய்...
இத்தனையும் வாரி தந்து.....
எதிர்பார்ப்பை கலைந்தேறிந்தாய்..............




                                                                                  ~ காற்றின் சிறகுகள்

புதிதாய்....................

ஸ்பரிசம் புதிதாய்..........
உணர்வுகள் புதிதாய்............
உறவுகள் புதிதாய்...................
உயிரும் புதிதாய்............
உன்னில் காட்டிடும்..........
என்னையும் புதிதாய்............



                                                                                  ~ காற்றின் சிறகுகள்

Saturday, 22 May 2010

தேடல்....................

பூவின் மென்மையை விட மேன்மை உன் ஸ்பரிசம்...
கடலின் ஓசை விட இசை உன் குரலோசை.....
காற்றின் குளுமையை விட இனிமை உன் தீண்டல்....
சக்கரையின் இனிப்பை விட சுவைப்பது உன் முத்தம்...
என் தனிமையின் அமைதியை விட ஏங்குவது உன் அருகாமை....



                                                                    ~ காற்றின் சிறகுகள்

இறைவா.........

என்னை படைத்த கடவுளுக்கு…என் விதியை ஏன் இப்படி தீட்டினாயோ….
தாயை பிரித்தாய்…….தாங்கினேன்……
வெகுதூரம் அழைத்தாய் வந்தேன்…
உயிருக்கும் கெடு வைத்தாய் ..ஏற்றுக்கொண்டேன்….
இருக்கும் நொடியிலும் ஏன் இப்படி தகிக்கிறாய்
….
காரணம் தெரியாது விழிக்கிறேன்……
அதை கூறாது சிரிக்கிறாய்....



                                                                            ~ காற்றின் சிறகுகள்



எங்கே??????

உயிரே நீ எங்கே…தேடினேன்….
இமைகளை உறங்க விடாது...
அன்பே நீ எங்கே…யாசித்தேன்….
சுவாசம் கூட எடுக்க மறந்து…
கனவே நீ எங்கே….உருகினேன்…
.சிரிப்பினை கூட உதிர்க்க மறந்து…
என்னவனே நீ எங்கே…..காத்திருந்தேன்….
கவிதைகளில் முழுகி….


                                                                        ~ காற்றின் சிறகுகள்

குழப்பம்

நான் ஒவ்வொரு முறை தாயினை தேடும் போதும்
கண்ணில் நீர் துளிர்க்கும்...…ஆனால் என் உறவுகள் இன்னும் உண்டு என்று மனதிடம் சொல்வேன்…
இன்று எதோ என்னிடம் யாருமில்லை
என்கிறது மனம்……இதுதான் மெய்யோ????
குழப்பமாய்
என் மனம்.......


                                                                                ~ காற்றின் சிறகுகள்

உன்னாலே..........என்னுள்ளே....

நான் ரசித்தவற்றை மறந்தேன்
உனக்காய் ......உன்னால் நீ ரசித்தவற்றை ரசிக்கிறேன்...
எனக்காய் தேடிய நாட்களை விடுத்தது
உனக்காய் தேடுகிறேன்....
உலகின் மற்ற உறவினை கூட துறக துணிகிறேன்
உன்னால்.............ஏன்? எதனால் உன்னால்.......
என்னுள்ளே இத்தனை மாற்றங்கள்???????
விடை தேடி நான்............விடையாய் நீ.............



                                                                  ~ காற்றின் சிறகுகள்


உன்னிடம்......

காலையில் கண் விழித்தேன்....
தோட்டத்தின் பூக்கள் என்னை பார்த்து சிரித்தன....
கல்லூரி செல்லும் வழியில்....
காற்றும் என்னை முத்தமிட்டது...
மாலையில் திரும்புகையில்....
பட்டாம்பூச்சிகளும் கேலிகள் பேசியது.........
இரவின் குளிரோ என்னை உன்னிடம் விட்டு சென்றது................


                                                                          ~ காற்றின் சிறகுகள்

Thursday, 20 May 2010

புதிராய்................

விழிகளில் ஒரு தேடல் மனதில் ஒரு வலி…
கரைந்தன
கண்ணில் நீர்…காரணம் மட்டுமே விடுகதை…
எதை நோக்கி இந்த ஏக்கம்???
புரியாத புதிராய் நான்…



                                                                     ~ காற்றின் சிறகுகள்


                                                                       

நீ.....

விழுகின்ற பனித்துளியில் கூடதெரிவது உன் முகம்……….
என்ன செய்ய என்னை முழுதும் ஆட்கொண்டாய் நீயே…………………..
சிரிப்பிலும் நீ………கண்ணீரிலும் நீ…………….
பார்வையிலும் நீ…………..பணிவிலும் நீ……
நாணத்திலும் நீ……………..அச்சத்திலும் நீ ………….
நான் முழுவதும் நீயே…………………





                                                                        ~ காற்றின் சிறகுகள்

முன் ஜென்ம பந்தம்

நான் முகம் தேடி சென்ற நொடியில்
 நீ என் பெயர் தேடி வந்தாய்;
எனக்கு எப்படி உன்னை தெரியும்???
நான் யோசித்தாலும்.......
எதோ ஒன்று நமது முன் ஜென்ம
 பந்தத்தினை சொல்கிறது.…………




                                                                         ~ காற்றின் சிறகுகள்


காதல் கோல்

எங்கிருந்து வந்தாளோ…………..
உன் உள்ளம் கொய்தாலோ……………
உன் நினைவில் சென்றாளோ……………..
உன் கனவில் வாழ்ந்தாலோ……………..
என்று நினைக்க தோன்றிதான் மனதில் எங்கும் புது புது விடியல்களே,
உந்தன் உயிரில் தோன்றிதான் என்றும் நிலைத்திடும் எனது விழிகளின் விடியல்களே ...............
பல நேரபோழுதினில் நீள வேண்டும் என்றும் எனது தேடல்களே ,
நான் வாழும் போதிலும் வீழும்போதிலும் உன்னை தேடி செல்வதேந்தேன் எண்ணங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பால் மனம் அவள் 16ooooooooooooooooo
நேர்முகம் கொண்ட 17oooooooooooooo
உனைர்வரியும் 18oooooooooooooooo
நீதான் அந்த மின் வெட்டோ
சொல்லின் மீறல் தோன்றினால் பூவில் தேன் அது இனிப்பின் மட்டம் தான் குறையாதே
உடன் காதல் தோன்றினால் பருவம் 8 திலும் அன்பில் குறைஎதுவும் கிடையாதே .
வாழும் வாழ்கை மட்டிலும் பார்வை பட்டிடும் யோகம் மட்டும் தான் வேண்டுமடி
எந்தன் மீது நீ கொண்ட பாசம் மட்டும்தான் எனக்கு அதன் அளவை காட்டுமடி…………………….

                                                                                                       ~ காற்றின் சிறகுகள்

உனக்காய்...........

அன்பாய் நீ பேசிடும் நேரம் கூட மறப்பேன்
கோபத்தினை கனவுகளில் கூட நினைப்பேன்
உன் மகிழ்ச்சியின் நேரத்தினை பார்பேன்
வருத்தம் வர நினைத்தால் எதிர்ப்பேன்
உன் உறவினை என்றும் எதிர்பார்ப்பேன்...
அனைத்திலும் உன் வழி இருப்பேன்......


                                                                                             ~ காற்றின் சிறகுகள்

மாயவனே.....

மனதினை தாக்கிய மாயவனே...
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்.......
நான் திரும்பிய திசைகளில் நீ தெரிந்தாய்
என்னையே புதிதாய் காட்டும் கண்ணாடி ஆனாய்..............
என்னுள் உதித்திடும் எண்ணம் ஆனாய்......
தூக்கம்தனை பறித்திடும் கனவுகள் ஆனாய்....
தூங்கவே செய்திடும் தாயுமானாய்........
காயங்கள் தந்திடும் ஆயுதமானாய்....
அவற்றினை ஆற்றிடும் மருந்துமானாய்.....
எழுத்துகளின் கோர்வையில் கவிதை ஆனாய்...
அதனை உனக்கு தந்திடும் விரலும் ஆனாய்...
ஆதலால்.............நீ முற்றிலும் நான் ஆனாய்......ஏனோ.....
கொல்லும் தனிமையில் விட்டு போனாய்....................





                                                             ~ காற்றின் சிறகுகள்