Thursday, 8 September 2011
Wednesday, 4 May 2011
அப்பா...மகள்.....
மகள் தூங்க தூங்காது இருக்கும் ஆண்....
பெண் ஆனதமாய் பள்ளி செல்ல அயராது உழைக்கும் ஆண்....
பெண் சிரிக்க தான் சிரிக்கும் ஆண்.....
மகள் வளர தன்னை உருகும் ஆண்....
பெண் படிக்க இரவிலும் விழித்திருக்கும் ஆண்...
ஒவ்வொரு பெண்ணையும் முதலில் நேசிக்கும் ஆண்.....
மகளின் முதல் தோழனான ஆண்.....
மகளின் முதல் காதலுக்குரிய ஆண்....
பெண்ணின் முதல் வழிகாட்டியாகும் ஆண்.....
நேற்றும்..இன்றும்...என்றும்.......மகளை தனது
Saturday, 5 March 2011
கடவுளிடம்.....
தவறு செய்யவென்றே எனக்கு பிறப்பு அளித்தாயோ......
காதல் மனதினை கூட ரணமாக்குகிறதே என் செயல்......
யாரையும் புரியாமலே.....புரிந்ததாய் உணருகின்றதே மனம்......
தேவை இல்லாத போதும்......தானாய் தலை இடுகிறதே என் உள்ளம்....
பாசத்தை தர தெரிந்தும்......பெற தெரியவில்லையே.......
இத்தனை தவறுகளை செய்கின்றதே இந்த ஜடம்.....
என்றுதான் இதற்கு விடுதலையோ.???
Tuesday, 1 March 2011
அணை...திறக்கும்....
காலை மாலை என்று உன்னை தேடி பார்த்த கண்கள் -
இன்றும் தேடுகின்றது பழைய புகைப்படங்களில்.....
வேண்டியதை கேட்டு ருசித்த நாக்கு-
இன்றும் ஏங்குகிறது உன் சமையல் ருசிக்கு.....
உன்னிடம் மட்டுமே சண்டையிட்ட மனம்-
இன்றும் சண்டையிடுகிறது அதனுடன்.....
உன்னிடம் மட்டுமே உணர்ந்த வெட்பத்தை-
இன்றும் உணர தவிக்கிறது என் உயிர்.....
நீ அழகாய் அழைத்திடும் செல்ல பெயரை கேட்ட காதுகள்-
இன்றும் துடிக்கிறது உன் குரலை கேட்க......
உன்னுடைய வாசத்தை உணர்த்த நாசி-
இன்றும் காற்றில் சுவாசிக்க தேடுகிறது.....
உன் மடியினில் குழந்தையாய், சீண்டிடும் மழலையாய்
என்றும் மாறிட ஏங்குகிறது என் ஆன்மா.....
இவற்றை எல்லாம் பேசிட பொங்கிடும் வார்த்தைகளை...அடகுகிறேன்
அணைகட்டி....ஒருநாள் உன் அருகில் வருவேன்....அன்று திறக்கும் என்
Monday, 28 February 2011
காதல் பெண்ணின்....சுதந்திரம்....
போராடி பெற்றது நம் நாட்டின் சுதந்திரம் மட்டும் அல்ல....
உன்னிடத்தில் இருந்து நான் பெற்ற என் சுதந்திரமும்.......
போரட்டத்தின் வெற்றியில் சுதந்திரம் கிடைப்பினும்....
என்னை வீழ்துகிறாய் உன் சந்தேகம் என்னும் ஆயுதத்தால்.....
இனி சுதந்திரம் இருபதின் பலன் என்ன????
Wednesday, 23 February 2011
Wednesday, 16 February 2011
Monday, 3 January 2011
என் இனிய அண்ணனுக்கு....
என் இனிய அண்ணனுக்கு....
உடன் பிறவா பொழுதிலும்...
உண்மையாய் பாசம் தந்தாய்...
உன் உதிரம் தனை போல கண்ணிமையாய் கொண்டாய்...
அன்பிற்கு ஏக்கமின்றி..அலைபோல் அள்ளி தந்தாய்...
குறும்புகள் அதிகம் செய்தும்...அழகாய் அதை ரசித்தாய்...
கோபம் கொண்டு கத்தும் போதும் அமைதியாய் புன்னகைத்தாய்...
ஏமாற்றம் கண்டபோது அன்னையாய் அரவணைத்தாய்...
இத்தனையும் செய்த உனக்காய்....பலன் என்ன நான் செய்ய??
அடுத்த பிறவி கொண்டு உன் தங்கையாய் உடன் பிறப்பேன்...
நாணம்....
என்னை உன் வீட்டின் முற்றத்தில் காக்க வைத்து...
நெடுநேரம் பின் வீடு வந்து...
சென்ற வேலை நடவாது...
ஏமாற்றம் கொண்டு... நேரத்தின் குறைபாடாய்
ஓடி சென்று குளியல் செய்து....
ஈரமுடன் நீ வர....உனக்காய்
காத்திருந்த என் மனம் உன்னை கண்டதும்
ஓடிவந்து உன் தலை துவட்ட ஏங்கிடும்..
அழகாய் உன் புன்னைகை கண்டு....
அணைத்து முத்தமிட நான் குரல் எழுப்பும் முன்..
ஓடி நீ அறை புகிந்திட...என்மனமும் நாணதிடம் புகிந்திடும்...
~ காற்றின் சிறகுகள்
~ காற்றின் சிறகுகள்
Subscribe to:
Comments (Atom)























